×

செங்கல்பட்டு அருகே காவல் உதவி மைய கட்டிடம்: எஸ்பி திறந்து வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, காவல் உதவி மையத்தை எஸ்பி பிரதீப் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட வேங்கடாபுரம், சாஸ்த்திரம் பாக்கம், தெள்ளிமேடு  பகுதிகளில் நடைபெறும் திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்றங்கள்,  சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் சம்மந்தமாக, நீண்ட தூரம் சென்று பாலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வேங்கடாபுரம், சாஸ்த்திரம் பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதி மக்கள் தங்களது பிரச்னை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், அதேபோல் இப்பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவங்களை குறைக்கும் விதமாகவும், இந்த காவல் உதவி மைய கட்டிடம் திறக்கப்பட்டதாக மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த காவல் உதவி மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பணியில் இருப்பார்கள். ஆகையால், மக்கள் தங்களது பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க இனி பாலூர் காவல் நிலையம் வரை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை. இனிமேல், இந்த காவல் உதவி மையத்தை பொதுமக்கள் அணுகலாம். இந்நிலையில், காவல் உதவி மையத்தை செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் திறந்து வைத்தார். அப்போது, டிஎஸ்பி பாரத், காவல் ஆய்வாளர்கள் அலெக்சாண்டர், அசோகன் மற்றும் உதவி ஆய்வாளர் கோதண்டன், காவலர்கள் உடன் இருந்தனர்.



Tags : Police Support Center Building ,Chengalpattu , Chengalpattu, Police, Help Desk Building, SP opened and laid
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!