ஆப்கானித்தானில் பெண்கல்விக்கு தடை விதிப்பு: ஆன்லைன் கல்வி முறையை நாடும் மாணவிகள்

காபூல்: ஆப்கானித்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியில் கல்வி மறுக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் கல்வி முறையை நாடத் தொடங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். தாலிபான்களின் ஆட்சி அமைத்து ஓராண்டுகளில் பெண்களுக்கு எதிரான பல அடக்குமுறைகள் தலைதூக்கியுள்ளது. அதிலும் பெண்கள் கல்வி பயிலப் பல தடைகளை விதித்து வந்தனர். தாலிபான்களின் உத்தரவின்படி மகளிருக்கான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் ஆப்கானில் பெண் கல்வியில் சீர்குலைவு ஏற்பட்டது.

இந்நிலையில், மாற்று வழியில் கல்வி பயிலும் முயற்சியில் ஆப்கான் சிறுமிகள் ஈடுபட்டுள்ளனர். சோபியா ரூபி அகாடமி உள்ளிட்ட நிறுவனங்கள் ஆன்லைன் கல்வி முறையை அறிமுகம் செய்துள்ளனர். இதில் மாணவர்களின் சேர்க்கை 100 மடங்காக அதிகரித்து உள்ளதாக அந்த கல்வி நிறுவனங்கள் கூறுகின்றன. கல்வி கற்கும் ஆர்வமிருந்தாலும் வறுமை காரணமாக இணைய மற்றும் லேப்டாப் வசதி இல்லாததால் பல மாணவிகளுக்கு கல்வி கற்பது எட்டா கனியாக உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.  

Related Stories: