ஆவடி: காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று திருநின்றவூரில் மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் அறவழி போராட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்.பி உள்பட ஆயிரக்கணக்கான காங்கிரசார் பெருந்திரளாக பங்கேற்றனர்.
இப்போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி கே.ஜெயக்குமார் பேசுகையில், தற்போது இந்தியாவில் ஒன்றிய பாஜ அரசு கொடுமையான ஆட்சி நடத்தி வருகிறது. இதன்மூலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று ஆவேசமாக தெரிவித்தார். இதில் மாநில நிர்வாகிகள் எஸ்.பவன்குமார், டி.அருள்அன்பரசு, வி.அருணாச்சலம், தரணிபாய், விக்டரி எம்.மோகன், ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி, கே.குமார், பிரகாஷ் முன்னிலையில் திருநின்றவூர் நகர தலைவர் டி.ஜே.விஸ்வநாதன் உள்பட ஏராளமான காங்கிரசார் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.