×

அரசு போக்குவரத்துக் கழகங்களில் விருப்ப ஓய்வு பெற்ற 23 பேருக்கு காசோலைகள்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு  மற்றும் இறந்த பணியாளர்களின் பணப்பலன்களுக்குரிய காசோலைகளை போக்குவரத்து  துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,626 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.308.45 கோடி வழங்கப்படுகிறது.  

சென்னை தலைமைச் செயலகத்தில்  போக்குவரத்துத்துறை அமைச்சர் அலுவலகத்தில்,  அமைச்சர் சிவசங்கர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த 23 விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, ஏனைய 1,603 பணியாளர்களுக்கும் அந்தந்தப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் வாயிலாக  காசோலைகள் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கோபால், அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Tags : Transport Minister ,Sivashankar , Cheques: Transport Minister Sivashankar presented checks to 23 voluntary retirees in government transport corporations
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது