×

அஸ்தினாபுரம், கீழ்க்கட்டளை பகுதிகளில் துணை மின்நிலைய பணி எப்போது துவங்கும்?: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ கேள்வி

தாம்பரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது இ.கருணாநிதி எம்எல்ஏ பேசுகையில், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.48 கோடியில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டதற்கு முதல்வர், மின்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அஸ்தினாபுரம், கீழ்க்கட்டளை பகுதிகளில் துணை மின்நிலையத்துக்கான இடம் கையகப்படுத்தப்பட்டு, டெண்டர் கோரப்படும் நிலையில் உள்ளது. இங்கு எப்போது பணிகள் துவங்கும் என்பதை அறிய விரும்புகிறேன் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பல்லாவரம் எம்எல்ஏவின் கோரிக்கைப்படி, நிலம் கண்டறியப்பட்டு வாகமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மின்துறையின் சார்பில் மதிப்பீடுகள் தயார் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அவை தயாரானதும், மேற்கண்ட 2 பகுதிகளிலும் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கும். அத்தொகுதியில் 3 துணை மின்நிலையங்கள் அமைக்க முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார் என்று பதிலளித்தார்.

Tags : Astinapuram ,Kielkathala ,E.Karunanidhi ,MLA , When will sub-station work start in Astinapuram and Kielkathalam areas?: E.Karunanidhi MLA question in Assembly
× RELATED அஸ்தினாபுரம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ரூ.1.40 லட்சம் பறிமுதல்