×

ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.!

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 50 இடங்களில் ஒரே நாளில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தராததற்கு சட்டம், ஒழுங்கு பிரச்னையை தவிர வேறு எதுவும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் வைத்து வருகிறார். எதற்காக தங்களது பேரணியை அனுமதிக்க மறுக்கிறார்கள் என தெரியவில்லை என ஆர்எஸ்எஸ் கூறியதற்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. பொதுபாதுகாப்புக்கு பாதிப்பு எனில் அரசு உரிய கட்டுப்பாடு விதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒரே நேரத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி தர முடியாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாதுக்காப்பு காரணங்களுக்காக 5 இடங்களில் பேரணி நடத்த முதலில் அனுமதி தர முடியும். பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை, நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இடமில்லை.

சட்டம் ஒழுங்கு மற்றும் இடங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றுள்ளது. உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளவில்லை. உளவுத்துறை அறிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது எனவும் அரசு குற்றசாட்டியுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து, தற்போது தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : RSS ,Supreme Court ,Tamil Nadu government , RSS The Supreme Court postponed the decision of the case filed by the Tamil Nadu government related to the rally without specifying a date.
× RELATED கரூர் நெரிசல் வழக்கு: 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?