கடலூர் கிழக்கு ராமாபுரம் பகுதியில் தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு..!!

கடலூர்: கடலூர் கிழக்கு ராமாபுரம் பகுதியில் தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்தது. கடலூர் அடுத்து மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் நெடுநிலை துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு தேஜஸ்வரன் என்ற 3  வயது ஆண் குழந்தை உள்ளது. இன்று காலை தேஜஸ்வரன் கிழக்கு ராமாபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் இருந்த குழந்தை சாலையில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் திடீரென தேஜஸ்வரன் மீது மோதியது.

அப்போது குழந்தை தேஜஸ்வரன் தலையில் வேனின் சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர். பின்னர், குழந்தை தேஜஸ்வரனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: