கடலூரில் தனியார் பள்ளி வேன் மோதி 3வயது குழந்தை உயிரிழப்பு

கடலூர்: கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் கிராமத்தில் தனியார் பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை தேஜேஸ்வரன் உயிரிழந்தது. வீட்டருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த வேன் மோதி குழந்தை பலியானது. குழந்தையின் சடலத்தை கைப்பற்றி திருப்பாதிரிப்புலியூர்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: