×

ஆமை வேகத்தில் குறையும் தங்கம் விலை சவரன் ரூ. 80 குறைந்து ரூ. 44,320க்கு விற்பனை!!

சென்னை: தங்கம் விலை, கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை சவரனுக்கு ரூ.1,880 வரை உயர்ந்து தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.43 ஆயிரத்தை கடந்தது. கடந்த 18ம் தேதி தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்வை கண்டது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,560க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,480க்கு விற்கப்பட்டது. கடந்த 20ம் தேதி சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.44,640க்கு விற்பனையானது. தங்கம் இனி காட்சி பொருளாக மாறி விடுமோ என்று மக்கள் நினைக்க தொடங்கினர்.

தொடர்ந்து 21, 22 ஆகிய தேதிகளில் தங்கம் விலை சற்று குறைந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.43,760க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினமும் தங்கம் விலை அதிரடியாக உயர்வை கண்டது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,540க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,320க்கும் விற்கப்பட்டது. நேற்றைய தினமும் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 160 ரூபாய் வரை உயர்ந்தது.

இந்த நிலையில் இன்று (27.03.2023) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,540க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.76க்கு விற்பனையாகிறது. தங்க விலையில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Shaveran , Gold prices falling at a snail's pace Shaveran Rs. 80 down to Rs. 44,320 on sale!!
× RELATED ஆமை வேகத்தில் குறையும் தங்கம் விலை சவரன் ரூ. 80 குறைந்து ரூ. 44,320க்கு விற்பனை!!