ராகுலின் எம்.பி. பதவி பறிப்புக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு காங். எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை..!!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். ராகுலின் எம்.பி. பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். சட்டமன்றம் முன்பு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பதாகை ஏந்தி முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது.

Related Stories: