மேற்கு வங்க அமைச்சர் பேச்சு மம்தா பானர்ஜி கடவுள் போன்றவர்

கொல்கத்தா: ‘மம்தா பானர்ஜி கடவுள் போன்றவர். பூசாரி கூட திருடன் ஆகலாம். ஆனால் கடவுள் ஒருபோதும் தவறு செய்ய முடியாது’ என மேற்கு வங்க மாநில அமைச்சர் சோபன்தேப் சட்டோபாத்யாய் பேசி உள்ளார். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் தேர்வில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் பார்தா சட்டர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு 24 பர்கனாஸின் கர்தாப் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில வேளாண் அமைச்சர் சோபன்தேப், ‘‘மம்தா பானர்ஜி நாம் வணக்கும் கடவுளைப் போன்றவர். கடவுளை வணங்கும் பூசாரி கூட சில சமயங்களில் திருடனாக மாறலாம். ஆனால் கடவுள் ஒருபோதும் தவறு செய்வதில்லை. நான் கூட திருடனாக இருக்கலாம். ஆனால், மம்தா எந்த தவறும் செய்ய முடியாது’’ என்றார்.

Related Stories: