ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தரவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி  வெளியிட்ட டிவிட்டர் பதிவு: திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை  மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், ஆன்லைன்  சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து  கொண்டுள்ளார். ரவிச்சந்திரன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை  இழந்ததால் ஏற்பட்ட ரூ.7 லட்சம் கடனை அவரது தாயார் அடைத்துள்ளார்.

அதன்பிறகும்  ஆன்லைன் சூதாட்ட மோகத்திலிருந்து மீள முடியாத ரவிச்சந்திரன் மேலும் பல லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.  புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த முதல் தற்கொலை.  இது  தொடர்கதையாகிவிடக்கூடாது. ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதை  ஆளுநர் உணர வேண்டும். எனவே, இனியும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் மீண்டும்  நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் உடனே  ஒப்புதல் அளிக்க வேண்டும்.

Related Stories: