×

ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜீவரத்தினம் நினைவு மண்டபம் திறப்பு: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

சென்னை: மீனவ மக்களுக்காக போராடிய ஜீவரத்தினம் அந்த சமுதாயத்தின் விடிவெள்ளியாக  திகழ்ந்தார். பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை மீனவ மக்களின் நலனுக்காக  பாடுபட்டவர். அவரது நினைவிடம் காசிமேடு சுடுகாட்டில் உள்ளது. இதனை புதுப்பித்து தரக்கோரி அவரது உறவினர்களும், மீனவ சமுதாயத்தினரும் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், தொகுதி மேம்பாட்ட நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கி, நினைவு மண்டபம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிந்தநிலையில் இதன் திறப்பு விழா, நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய அருணா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜீவரத்தினம் மகள் பானுமதி பாஸ்கரன் ஜீவரத்தினம் நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மீனவப் பெண்கள் 200 பேருக்கு அன்னக்கூடை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், சென்னை மாநகராட்சி 4வது மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன், ராயபுரம் பகுதிச் செயலாளர்கள் வ.பே.சுரேஷ், செந்தில்குமார், சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ், மீனவ சங்கத் தலைவர்கள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Tags : Jeevaratnam Memorial Hall , Inauguration of Rs 10 lakh renovated Jeevaratnam Memorial Hall: MLAs attend
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்