சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பதவிக்கான கலந்தாய்வு, வரும் 17ம் தேதி தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி செயலாளர்உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் காலியாக உள்ள 831 பணியிடங்களுக்கு, கடந்த 2.7.2022 தேர்வு நடைபெற்றது. இதில் 1,724 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 1594 பேர் நேர்காணலில் பங்கேற்றனர்.
நேர்முக தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற ஒருங்கிணைந்த மதிப்பெண்களின் பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. 1594 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 17, 18ம் தேதி மற்றும் 19ம் தேதி நடைபெறும்.
