
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக, சில வாரங்களுக்கு முன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடும் மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்று சரியான நிலையில், சில நாட்களுக்கு முன் சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில், இளங்கோவனுக்கு நேற்று காலை மீண்டும் அவருக்கு கடும் மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஐசியு பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருவதுடன் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.