×

இந்திய அணி இன்று இலங்கை பயணம்: அடித்து நொறுக்க காத்திருக்கிறோம்..! கேப்டன் ஷிகர் தவான் பேட்டி

மும்பை: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒன்டே, 3 டி.20 போட்டிகளில் ஆட உள்ளது. இதற்காக இந்திய அணியினர் இன்று மும்பையில் இருந்து கொழும்பு புறப்படுகின்றனர். இதையொட்டி நேற்று கேப்டன் தவான், பயிற்சியாளர் ராகுல்டிராவிட் ஆகியோர் ஆன்லைனில் பேட்டி அளித்தனர். அப்போது தவான் கூறியதாவது: இது ஒரு புதிய சவால். நாங்கள் நன்றாக செயல்படுவோம் என்று நம்புகிறோம். திறமையை வெளிப்படுத்த இது ஒரு அருமையான வாய்ப்பு. எப்போது களம் இறங்கி அடித்து நொறுக்குவோம் என ஆர்வமுடன் காத்திருக்கிறோம், என்றார்.ராகுல் டிராவிட் கூறியதாவது: எங்களிடம் ஒரு நல்ல அணி உள்ளது, 20 வீரர்கள் உள்ளனர். இந்த குறுகிய தொடரில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லாதது. தொடரை வெல்வதற்கான சிறந்த அணி எதுவோ, அதை நாங்கள் தேர்வு செய்வோம். சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, தவான் போன்ற மூத்தவர்களிடமிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆனால் எங்களது பிரதான இலக்கு, தொடரை வெல்வது தான், என்றார்….

The post இந்திய அணி இன்று இலங்கை பயணம்: அடித்து நொறுக்க காத்திருக்கிறோம்..! கேப்டன் ஷிகர் தவான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Shikar ,Dawan ,Mumbai ,India ,Shikar Dawan ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...