×

இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் H3N2 என்னும் இன்ஃபுளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது என்கிறார். இதுவரை 33,544 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் 14.13 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பரவல் இருப்பதால் விரைவில் 10ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு இலவச தடுப்பூசு செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இந்தியாவில் முதன் முறையாக அரசு தரப்பில் இன்ஃபுளூயன்சா காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது என்று சுட்டிக்காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் விருப்பம் இருப்போர் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.


Tags : Tamil Nadu ,Minister ,Ma. Subharamanyan , Influenza Fever, Tamil Nadu, Minister M. Subramanian, Women's Day
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...