×

திருப்பதி மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிலர், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் முதலாவது மலைப்பாதை வழியாக வாகனத்தில் திரும்பினர். அப்போது சாலையோரம் நடமாடிய சிறுத்தை ஒன்று, அங்குள்ள புதர் அருகே மறைந்து நின்றபடி தண்ணீர் குடித்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அதனை வீடியோ எடுத்தனர். சில நிமிடங்கள் அங்கிருந்து சிறுத்தை, வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

திருமலையில் வழக்கமாக சிறுத்தைகள் இரவில் மட்டுமே நடமாடுவது வழக்கம். ஆனால் தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீர் தேடி பட்டப்பகலில் சிறுத்தைகள் வெளியே வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் சிறுத்தை நடமாடிய பகுதியை பார்வையிட்டனர். வனப்பகுதியில் செயற்கை குட்டைகளை ஏற்படுத்தி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

Tags : Tirupati , Tirupati mountain pass, walking leopard, devotees shocked
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...