×

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்தியா மீது வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு - மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவ ளத்தெரிவித்துள்ளது.


Tags : Tamilnadu ,Meteorological Department , Chance of moderate rain at few places in Tamilnadu from today for 5 days
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்