திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: குழந்தையை கடத்திய பெண் கைது

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை நேற்று கடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் 12 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர். குழந்தையை கடத்திய பெண் பாண்டியம்மாள் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும், குழந்தை இல்லாத காரணத்தால் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் பாண்டியம்மாள் 9 மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தற்போது பிரசவத்திற்கு மருத்துவமனை செல்வதுபோல நடித்து குழந்தையை திருடி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை கடத்திய பெண் பாண்டியம்மாள் என்பவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: