எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

புதுடெல்லி: சிறை தண்டனைப் பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநித்துவ சட்டப்பிரிவு 8ன் உட்பிரிவான 3ஐ ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அபா.முரளிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,‘‘இரண்டாண்டு அல்லது அதற்கு மேலாக சிறை தண்டனை விதிக்கப்பட்டால், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். குறிப்பாக மக்கள் பிரதிநித்துவ சட்டம் பிரிவு 8ன் உட்பிரிவு 3ல் தானாக தகுதி இழப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

தற்போது அதனை பயன்படுத்தும் நடைமுறை முற்றிலும் மாறியுள்ளது என்பது மட்டுமில்லாமல் சட்ட விரோதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலை என்பது சில ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. மேலும் இது இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான பேச்சுரிமையை முடக்குவது போன்றும் உள்ளது. அதனால்  எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியில் இருந்து தானாக தகுதி இழப்புக்கு வழிவகை செய்யும் மக்கள் பிரதிநித்துவ சட்டப்பிரிவி 8ன்  உட்பிரிவான 3ஐ ரத்து செய்ய வேண்டும்.  இந்த மனு முக்கியத்துவம் வாய்தது என்பதால் வழக்கை அவசரமாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.  ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட  நிலையில்  தாக்கல் செய்யப்பட் டஇந்த மனுவானது நாளை உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: