புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்

வாஷிங்டன்: புகழ்பெற்ற இந்திய அமெரிக்க தொழிலதிபரும் சமூகத் தலைவருமான திக்விஜய் டேனி கெய்க்வாட், புளோரிடா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை புளோரிடா மாகாண கவர்னர் ரான் டிசாண்டிஸ் வெளியிட்டுள்ளார். புளோரிடாவின் ஓகாலா நகரை சேர்ந்த கெய்க்வாட் என்டிஎஸ் யுஎஸ்ஏ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓவாக உள்ளார். மேலும், டேனி ஜி மேனேஜ்மென்ட், டேனி டெவலப்மென்ட் மற்றும் முதலீடு, டிஜி ஹாஸ்பிடாலடிட்டி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். இவர் உபி மாநிலம் வதோதராவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: