×

ராகுல்காந்தி தகுதி நீக்கம் நியாயமற்றது: சரத்குமார் கண்டனம்

சென்னை:  சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:   பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, மோடி என்ற பெயர் கொண்டவர்களை பற்றி தவறுதலாக பேசியதாக தெரிவித்து, குஜராத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்ததில், சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் ஜாமீன் வழங்கி தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு கூடி, விசாரணை நடத்தி 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருக்கலாம். ஆனால், கால அவகாசம் கொடுக்காமல் உடனடியாக தகுதி நீக்கம் செய்தது ஏன் என்று புரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு, நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டு, 30 நாட்கள் அவகாசம் வழங்கி விளக்கம் கோரும் போது, நாடாளுமன்றத்தில் உரிய கால அவகாசம் வழங்காமல், உடனடியாக தகுதிநீக்கம் செய்தது, அவர்களின் ஜனநாயக கடமையை ஆற்றுவதை தடை செய்வதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : Rakulkandhi ,Sarathkumar , Rahul Gandhi's disqualification is unfair: Sarathkumar condemns it
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...