சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த பிரியா மகன் கோகுல்  (17). கடந்த டிசம்பர் 31ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் பேட்டரி திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தாக்கியதில் கோகுல்  உயிரிழந்தான். இது தொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா விசாரித்தார். தொடர்ந்து கோகுல் யை அடித்து கொலை செய்த சிறுவர் சீர்திருத்த பள்ளியின் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவலர்கள் மற்றும் முடி திருத்துபவர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.  மேலும், அப்பள்ளியில் மருத்துவ உதவியாளராக பணியாற்றிய நந்தகோபால் (58) என்பவரை செங்கல்பட்டு நகர போலீசார் கைது செய்தனர். மொத்தம்  8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: