×

ஆளுநரின் பணி என்ன?

* ஆளுநரின் மனதில் அரசியல் விருப்பு வெறுப்புகள் இருக்க கூடாது. எதிர்கால நியமனங்கள் பற்றி எதிர்பார்ப்பு இருக்க கூடாது.

* ஆளுநரின் முழு அர்ப்பணிப்பும் மாநிலத்தின் நலனுக்காக இருக்க வேண்டும்.

* சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் ஒரு மசோதாவை மாநில ஆளுநர் தமது பரிசீலனை அல்லது ஆய்வுக்கு உட்படுத்தி ஒப்புதல் வழங்கலாம்.

* ஒருவேளை அந்த மசோதாவில் விளக்கங்கள் தேவைப்பட்டால் அதை அவர் அரசிடம் கேட்டுப் பெறலாம். அந்த மசோதா திருப்தி அளிக்கவில்லை என்றால் அதை அவர் அரசுக்கே திருப்பி அனுப்பலாம்.

* அவ்வாறு அனுப்பப்படும் மசோதா, ஆளுநரின் யோசனைகளுடன் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தால் அதற்கு அவர் ஒப்புதல் வழங்குவது கட்டாயமாகும்.

* தெலங்கானாவில் ஆன்லைன்  ரம்மிக்கு 2017ம் ஆண்டே தடை ஆன்லைன் ரம்மிக்கு இளைஞர்கள் அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற விளையாட்டுகளால் பலரின் குடும்ப வாழ்க்கை பாதித்துள்ளது. இதை தடுக்கும் வகையில் தெலங்கானா அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி அன்றே அரசாணை கொண்டு வந்தது. அதில், ‘இதுபோன்ற விளையாட்டுகளால் பலரின் குடும்ப வாழ்க்கை பாதித்துள்ளது. ரம்மி ஒரு திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு அல்ல, அதிர்ஷ்டத்தை உள்ளடக்கியது. ஆன்லைன் ரம்மி கார்டு கேம்களால் ஏற்படும் சமூக தீமைகளை தடுக்க தெலங்கானா அரசு அரசாணையை கொண்டு வந்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தெலங்கானா கேமிங் சட்டம், 1974ன் விதிகளில் சில மாற்றங்களைச் செய்து, தெலங்கானா கேமிங் (இரண்டாவது திருத்தம்) ஆணை, 2017ம் ஆண்டு வெளியிடப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் தெலங்கானாவில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

* ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தால் புதுச்சேரியிலும் சூதாட்ட தடை சட்டம் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘பந்தயம் வைத்தல், சூதாடுதல், இந்திய அரசின் 7ம் இணைப்பு பட்டியலின், 2ம் துணை பட்டியலில் மாநில பிரிவில் 34வது பதிவில் உள்ளது. தலைமை செயலர் ஆலோசனையின் ேபரில், இணைய வழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் விளையாட்டுகளை முறைப்படுத்துதல் சட்ட முன்வரைவு சட்டத்துறையால் தயாரிக்கப்பட்டு உள்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வரைவு அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் எந்த ஒரு தண்டனை சட்டத்துக்கும் ஒன்றிய அரசின் இசைவை பெற ேவண்டும். அதன்படி இந்த சட்ட முன்வரைவுக்கு ஒன்றிய அரசின் அனுமதி பெற்றப்பட்டவுடன் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டம் புதுச்சேரி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.



Tags : governor , What is the job of the governor?
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...