×

டான்செட், சீட்டா ரிசல்ட் ஏப்ரல் 15ம் தேதிக்குள் வெளியாகிறது

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது நுழைவு தேர்வு இயக்குனர் ஸ்ரீதர், நிருபர்களிடம் கூறியதாவது: எம்இ, எம்பிளான், எம்டெக், எம்ஆர்க் உள்ளிட்ட படிப்புகளுக்கான சீட்டா தேர்வு முதல் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. சீட்டா தேர்வின் மூலம் ஒரே விண்ணப்பத்தின் கீழ் நுழைவு தேர்வும், மாணவர் கலந்தாய்வும் நடைபெறும். வெளிப்படை தன்மையோடு மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு தேர்வு எழுதிய பின் வினாத்தாளை எடுத்து செல்ல அனுமதி உள்ளது. இதற்கு முன் வினாத்தாள்கள் வழங்கப்படவில்லை. விடை குறிப்பில் தவறுகள் இருப்பின் மாணவர்கள் சேலஞ் செய்யலாம். நுழைவு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். டான்செட் தேர்வு எழுதியவர்களுக்கான கலந்தாய்வு கோயமுத்தூரில் நடைபெற உள்ளது. அதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். சீட்டா தேர்வு எழுதும் மாணவர்கள் கலந்தாய்விற்காக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Cheetah , Dancet, Cheetah Result will be released by 15th April
× RELATED பந்தலூர் அருகே கூண்டில் புகுந்து கோழியை வேட்டையாடிய சிறுத்தை