வரத்து குறைவால் கோயம்பேட்டில் காய்கறிகள் விலை ‘கிடுகிடு’

சென்னை: வரத்து குறைவால் கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 20ம் தேதி பெய்த மழையால், கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை குறைந்தது. வழக்கமாக, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 650 வாகனங்களில் 7000 டன் காய்கறிகள் வரும்.இந்நிலையில், நேற்று காலை  600 வாகனங்களில் 6500 டன் காய்கறிகள் வந்தன. இதன் காரணமாக, ஒரு கிலோ பீன்ஸ் ரூ.35 லிருந்து ரூ.100க்கும், கேரட் ரூ.35 லிருந்து ரூ.60க்கும், வெண்டைக்காய் ரூ.25 லிருந்து ரூ.35 க்கும் கத்திரிக்காய் ரூ.15 லிருந்து ரூ.25க்கும், அவரைக்காய் ரூ.35 லிருந்து ரூ.60க்கும், சவ்சவ் ரூ.15லிருந்து ரூ.25க்கும், பச்சை மிளகாய் ரூ.25 லிருந்து ரூ.35 க்கும், பச்சை பட்டாணி ரூ.40 லிருந்து ரூ.70 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்கத் தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறுகையில், ‘‘கடந்த 6 நாட்களுக்கு முன்பு மழையின் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலை குறைந்தது. இந்த நிலையில், வரத்து குறைவால் காய்கறிகளின் விலை திடீர் என்று உயர்ந்துள்ளது. படிப்படியாக காய்கறிகளின் விலை மீண்டும் உயரும்.’’ என்றார்.

Related Stories: