×

குறும்படங்கள் வாயிலாக போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!

சென்னை: போதைப்பொருள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்த்திடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆவணப்பட திரையிடல்-காமிக்ஸ் தொடர் வெளியீட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கமிஷனர் சங்கர் ஜிவால் பங்கேற்றனர். இதில் போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு குறும்பட போட்டியில் முதல் பரிசு எழவு என்ற குறும்படம் வென்றது. அந்த படத்தின் இயக்குனர் பிரகதீஸுக்கு ரூ.1,00,000 பரிசுத்தொகையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இரண்டாவது பரிசு அன்பு என்ற குறும்படம் வென்றது. அதன் இயக்குனர் 11-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.50,000 பரிசுத்தொகையினை அமைச்சர் வழங்கினார். மேலும், 3-வது பரிசு பெற்ற குறும்படம் அன்பின் போதை, போலீஸ் ஆகும். அதற்கான பரிசுத்தொகை ரூ.25,000 இயக்குனர்கள் பெற்றனர்.   

பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போதைப்பொருள் ஒழிப்புக்காக ஏற்பாட்டிலான ஆவணப்பட போட்டியில் வென்ற எழவு, அன்பின் போதை, அன்பு, போலீஸ் ஆகிய விழிப்புணர்வு படைப்புகளைத் தந்து பரிசுத்தொகையினை வென்ற தம்பிகள் பிரகதீஸ்,ஹேம்நாத், கிருஷாங்க் நாராயணன் & மனோஜ் கண்ணன் ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், இதை சிறப்பாக ஒருங்கிணைத்த காவல்துறைக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். போதையால் வீழும் மனித ஆற்றலை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்துவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறும்படங்கள் வாயிலாக போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், போதைப்பொருட்கள் ஒழிப்பில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளைச் செய்திட வேண்டுமெனத் தொடர்ந்து கூறிவருகிறேன்.இத்தகைய குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். பாராட்டுகள்!போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம்!, என்று தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,M.K.Stal , Short Film, Drug Addiction, Against, Awareness, Chief Minister, Plea
× RELATED 101வது பிறந்தநாள் கொண்டாட்டம் கலைஞர்...