×

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சோகாதாரத்துறை கடிதம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சிலதினங்களாக அதிகரித்து வருகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பதிப்பில் 6.3 % தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளது என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே சுவாசப்பிரச்னைகளை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடிய வகையில் மக்களிடம் போதிய விழிப்புணர்வுகளை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தொற்று இருப்பது போல் உணர்ந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அனைத்து மாநில செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனை செய்யும் எண்ணிக்கை ஒப்பிடும் வகையில் திருப்திகரமாக இல்லை என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.


Tags : India ,Union Health Ministry , Corona infection in India increasing, tests should be increased, Union Health Ministry
× RELATED மருத்துவ காப்பீடு தந்த யுனைடெட்...