ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் :உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

சென்னை : ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட  வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மதுரையில் ரூ.166 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு, உச்சநீதிமன்றம தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், உயர்நீதிமன்ற பொறுப்பு  தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.  மேலும், சட்டத்துறை அமைச்சர்  ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் பேசியதாவது: ‘‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. தமிழ் நாட்டிலுள்ள நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு மிக சிறப்பாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு நீதிமன்றத்தில் காற்றோட்டம் இல்லாமலும், கழிப்பறை இல்லாமலும் உள்ளது. காணொலி நீதிமன்றம் மூலம் மதுரையிலுள்ள சட்ட கல்லூரி மாணவர்கள் உச்சநீதிமன்ற வழக்குகளை கவனிக்க முடிகிறது. தமிழக முதல்வர் தரப்பில் 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த நாட்டிற்குமானது. இணையவழி மூலமாக நீதிபதி டெல்லியில் இருக்கும் வழக்கறிஞர்கள் மேலூரிலோ, விருதுநகரிலோ இருந்து வாதிடலாம். நீதிமன்ற செயல்பாடுகளை நேரலை செய்வதன் மூலமாக சட்டக் கல்லூரி மாணவர்களும் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும். ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். ’’, என்றார்.

Related Stories: