×

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருச்சி, கரூர், ராணிப்பேட்டை, நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை இடி, மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவை வால்பாறை, சேலம் சந்தியூர், திருப்பூர் வெள்ளக்கோவிலில் தலா 8செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 27, 28-ம் தேதி தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29-ம் தேதி தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre , Tamil Nadu, today, heavy rain, weather, research center, information
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்