×

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு ஊழியர்கள் சீனாவின் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த தடை!

பாரீஸ் : அரசு ஊழியர்களின் தொலைபேசிகளில் சீனாவுக்கு சொந்தமான  வீடியோ பகிர்வு செயலியான டிக் டாக்கை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல `டிக்-டாக்’ செயலி உலகமெங்கும் கொடி கட்டி பறந்தது. இந்த ‘டிக்-டாக்’ செயலியால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அரசு ஊழியர்கள் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த அமெரிக்க அரசாங்கம் தடை விதித்தது.

இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.  அதே போல ரஷ்யாவிக் டிக் டாக், ஸ்நாப் சாட், டெலிகிராம், வாட்ஸ் அப் போன்றவை பயங்கரவாத செயலிகளாக பரிந்துரை செய்யப்பட்டன. இந்த நிலையில் பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் டிக் டாக் செயலியை அரசின் மின்னணு சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக தெரிவிக்க[ப்பட்டுள்ளது.

ஆனால் தங்கள் சொந்த போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை இல்லை என்றும் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் வலைத்தளங்களை கட்டுப்படுத்த பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Tags : French government ,China , France, government employees, China, ``Tick-Tog,'' app
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா