×

தோடர் பழங்குடியின கிராமத்திற்கு கான்கிரீட் நடைபாதை அமைப்பு

ஊட்டி: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட தமிழகம் தோடர் பழங்குடியின கிராமத்திற்கு நடைபாதை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட தோடர் பழங்குடியின மக்கள் வாழும் தமிழகம் மந்து பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு நடைபாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 7வது வார்டு கவுன்சிலர் விசாலாட்சி முயற்சியால், இப்பகுதிக்கு நடைபாதை அமைக்க நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது.

நடைபாதை அமைக்க பொது நிதியில் இருந்து ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று நடைபாதை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டது. மேலும், இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய்க்கு மூடிகள் அமைக்கப்பட்டது. இதனை கவுன்சிலர் விசாலாட்சி, ஆய்வு செய்தார். பல ஆண்டுகளுக்கு பின் தோடர் பழங்குடியின மக்கள் வாழும் மந்து பகுதிக்கு கான்கிரீட் நடைபாதை வசதி ஏற்படுத்திக் கொடுத்த நிலையில், அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

Tags : Thodar Tribal ,Village , Concrete Pavement System for Thodar Tribal Village
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...