பழநி கோயிலில் பக்தர்களின் பாதம் காக்க வெளிப்பிரகாரத்தில் வெள்ளை பெயிண்ட்

பழநி: கொளுத்தும் கோடையில் இருந்து பக்தர்கள் பாதத்தை காக்கும் வகையில் பழநி மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நெருங்குவதால், தற்ேபாது வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயிலில் உள்ள வெளிப்பிரகாரத்தை சுற்றி வந்து வழிபடுவது வழக்கம்.

தவிர பஞ்சாமிர்தம், கோயில் பிரசாதம், வின்ச் நிலைய மேல்தளம், ரோப்கார் மேல்தளம், அன்னதானம் போன்றவைகளுக்கு செல்வதற்கும் வெளிப்பிரகாரத்தையே பயன்படுத்த வேண்டி உள்ளது. வெளிப்பிரகாரம் முழுவதும் சிமெண்ட் தளமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது வெயில் கொளுத்துவதால் பக்தர்கள் மதிய வேளைகளில் வெளிப்பிரகாரத்தில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை தவிர்க்க வெளிப்பிரகாரத்தில் தற்போது சுமார் 3 அடி அகலத்திற்கு மேட் விரிக்கப்பட்டுள்ளது. தவிர, மேற்கு வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றொரு நடவடிக்கையாக வெளிப்பிரகாரங்களில் பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல் அடிவாரம் கிரிவீதியிலும் வெள்ளை பெயிண்ட் அடிக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: