கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் பற்றி விசாரணை நடத்துமாறு சென்னை காவல் ஆணையருக்கு, டிஜிபி உத்தரவு

சென்னை: கலாஷேத்ராவில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் புகார் தந்ததாக சமூக வலைதளங்களில் பரவியது. சமூக வலைதளங்களில் பரவிய தகவலை அடுத்து தேசிய மகளிர் ஆணையம் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபிக்கு உத்தரவு அளித்தனர். பாலியல் தொந்தரவு எதுவும் தனக்கு நேரவில்லை என சம்பந்தப்பட்ட மாணவி சாஸ்திரி நகர் போலீசில் விளக்கம் அளித்துள்ளார். கலாஷேத்ரா ஆசிரியர் குறித்து தவறான தகவல் பரப்பப்படடு வருவதாக சாஸ்திரி நகர் போலீசில் மாணவி புகார் அளித்துள்ளனர். மாணவி அளித்த புகார் குறித்தும், சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: