அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்வு எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

சென்னை: திமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் கடந்த புதன்கிழமை நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், ஸ்ரீராம், மணிசங்கர் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். மேலும், இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. கடந்த புதன்கிழமை நடந்த வாதங்களை தொகுத்து எழுத்துப்பூர்வ வாதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து நிலுவையில் இருக்கும் மூல வழக்கில்தான் முடிவு செய்ய முடியும் என்று இரு நீதிபதிகள் அமர்வும் உச்ச நீதிமன்றமும் கூறியுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிப்பது அதற்கு  முரணானது என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: