×

நாடாளுமன்ற துளிகள்...

* 1161 பேருக்கு எச்3என்2 தொற்று  மக்களவையில் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் பாரதி பிரவின் பவார்  கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுவாச தொற்று நோயாளிகளில் 50 சதவீதம் பேர் எச்3என்2 இன்ப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்கள். ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரை பருவகால இன்ப்ளூயன்ஸா வைரசின் துணை வகையான எச்3என்2 சுவாச வைரஸ் தொற்றினால் மொத்தம் 1161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் ரூ.11,794 கோடி முதலீடு மக்களவையில் எம்பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து ஒன்றிய பாதுகாப்பு துறை இணையமைச்சர் அஜய் பட் பேசிய போது, ‘’கடந்த 2018-19 பட்ஜெட்டில் அறிவித்தபடி, உ.பி.யில் 6 முனையங்கள் மற்றும் தமிழ்நாட்டில் 5 முனையங்களில் இரண்டு பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் தொடங்கப்பட்டன. இவற்றில் உ.பி.யில் ரூ.12,191 கோடி மதிப்பிலான 108 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதில் ரூ.2,445 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 53 நிறுவனங்கள் ரூ.11,794 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதில் ஏற்கனவே ரூ.3,894 முதலீடு பெறப்பட்டுள்ளது. மேற்கொண்டு நாட்டில் புதிய பாதுகாப்பு தொழில் வழித்தடம் எதுவும் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் தற்போது இல்லை,’’ என்று தெரிவித்தார்.



Tags : Parliament , Parliament drops...
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...