வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சிவத்தலங்களில் முக்கிய தலமாகும். இக்கோயிலில், ஆண்டுதோறும் 11 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, உபயதாரர்கள் ஆலோசனை கூட்டம் கோயில் வளாகத்தில் நடந்தது. திருக்கழுக்குன்றம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.

கோயில் செயல் அலுவலர் சக்திவேல், கோயில் மேலாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 11 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவை எப்படி சிறப்பாக நடத்துவது, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை, பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. உபயதாரர்கள், சிவாச்சாரியார்கள், சீர்பாதம் தாங்கிகள் உட்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: