×

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் பொருட்கள் சேவை,வரி மற்றும் மின் வழிச்சீட்டு குறித்த இணையவழி பயிற்சி

சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், வழங்கும் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி 3 நாட்கள் பயிற்சினை வரும் 29.03.2023 தேதி முதல் 31.03.2023-ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு. அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும். இப்பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

* தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600032 என்ற முகவரியிலும் 9677152265,044-22252081, 22252082. 9444556099, என்ற தொலைபேசி எங்களிலும் பயிற்சி தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.




Tags : Tamil Nadu Entrepreneurship Development and Innovation Corporation , Tamil Nadu, Entrepreneurship Development, Innovation Institute, Provider of Material Services, Tax and E-Voting, E-Training
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்