சென்னையில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சி

சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னை, பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சி (3 நாட்கள்)  பயிற்சியினை வரும் 29.03.2023 தேதி முதல் 31.03.2023-ம் தேதி வரை (காலை 10.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை) வழங்க உள்ளது. இப்பயிற்சியில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு, அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை)   காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.முன்பதிவு அவசியம்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,  சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600032. 9444556099, 9677152265, 044-22252081/22252082.

Related Stories: