சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்த பயண அட்டை மட்டுமே செல்லும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல்.19ம் தேதி முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப் புழக்கத்தை குறைக்க வேண்டிய தேவைக்காகவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
