சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்-வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி

சித்தூர் : சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சித்தூர் மாநகரத்தில் முக்கிய சந்திப்பான எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் தமிழ்நாட்டில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும், கேரளா, மகாராஷ்டிராவில் இருந்தும் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள்  இந்த வழியாக வந்து செல்கிறது.

அதேபோல் ஏராளமான கிராமங்களில் இருந்து சித்தூர் மாநகரத்திற்கு வர வேண்டும் என்றால் இந்த எம் எஸ்ஆர் வழியாக வரவேண்டும். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் எம்எஸ்ஆர் சரக்கு வழியாக செல்ல வேண்டும்.ஆனால் கடந்த ஒரு வாரமாக எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் உள்ள பாதாள கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் முழுவதும் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.  

இதனால் அப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அவ்வழியாக செல்லும் பொது மக்களும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக செல்லும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் பெரும் அவதிப்பட்டு செல்கிறார்கள் எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அடைப்பு ஏற்பட்ட கழிவுநீர் கால்வாயை சீர் செய்து சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: