சென்னை: ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ராகுலின் ஒற்றுமை நடைபயணம் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர்ந்துள்ளது. ராகுல் காந்தியை 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கவிடாமல் செய்துவிடலாம் என்று பாஜக திட்டமிட்டுகிறது என அவர் தெரிவித்தார்.
