அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அழைப்பு!

சென்னை: அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அழைப்பு விடுத்துள்ளார். அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி ‘நம்ம ஊர் பள்ளி‘ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் முன்னெடுப்பாக https://nammaschools.tnschools.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி உள்ளே சென்று பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

இந்த இணையதளத்தில் பள்ளியில் பயின்ற மற்ற மாணவர்களையும் இந்த குழுவில் இணைத்து கொள்ள அழைப்பு விடுக்கும் அமைப்பு உள்ளது. அதை பயன்படுத்தி பள்ளியில் பயின்ற நண்பர்களையும் இக்குழுவில் இணைக்கலாம் என்று கூறப்படுகிறது. நாம் பயின்ற பள்ளிக்கு நம்மால் முடிந்த பங்களிப்பை செய்வதன் மூலம் அரசு பள்ளிகளை மேம்படுத்த முடியும். நம் பள்ளி முதலில் எப்படி இருந்தது, நம் பங்களிப்பினால் எப்படி மாறியிருக்கிறது என்பதை இணையதளம் வாயிலாக பார்க்க முடியும்.

இந்த வெளிப்படை தன்மையே இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும். நாம் அனைவரும் இணைந்தால் தமிழ்நாட்டிலிருக்கும் அரசு பள்ளிகள் அனைத்தையும், அரசு பள்ளிகாள மாற்றி, கல்வியிலும், கலைகளிலும், திறன்களிலும், அழகிலும், சுற்றுச்சூழலிலும், அமைதியிலும் உலகத்திற்கே ஒளி காட்டும் தீப்பந்தங்களாக திகழும். எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: