×

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 211 ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்-அலுவலகங்கள் வெறிச்சோடியதால் பணிகள் பாதிப்பு

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று 211 ஊழியர்கள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அலுவலகங்கள் வெறிச்ேசாடியது.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று நடந்தது. அதில், தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட்டு பதவி உயர்வு வழங்கவேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக துணை துணை தாசில்தார் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெறும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், இளநிலை, முதுநிலை என வருவாய் ஆய்வாளர் பெயர் மற்றும் அசாரணை வெளியிடவேண்டும், அரசு மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பங்கேற்றனர். இதில் தாசில்தார் முதல் உதவியாளர் வரை என மொத்தம் 211 பேர் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்தனர்.  இதனால் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வருவாய்த்துறை அலுவலர்களின் போராட்டத்தை அறியாத பொதுமக்கள் தங்களின் பல்வேறு பணிகளுக்காக வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags : Association of Revenue Officers ,Struggling- , Vellore: Yesterday, 211 employees on behalf of the Revenue Officers' Association in Vellore district went on a strike for accidental leave, leaving government offices in a frenzy. Tamil Nadu
× RELATED குட்டியை மீட்க போராடும் நாய் கதை