சட்டசபை 2 நாள் நிகழ்வுகளில் மாற்றம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 6ம் தேதி (வியாழக்கிழமை) காலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அது ஏப்ரல் 10ம் தேதி (திங்கட்கிழமை) காலைக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஏப்ரல் 10ம் தேதி காலையில் நடைபெற இருந்த தொழில்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம், ஏப்ரல் 6ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.

Related Stories: