×

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்திய பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: இலங்கைக் கடற்படையினரால் நேற்று 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை, இந்தியப் பிரதமர் அவர்களின் உடனடி கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன், இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 28 மீனவர்களும், 4 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் நமது மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது, நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அரசு பல கண்டனக் கடிதங்களை அனுப்பியும் இதுபோன்ற சம்பங்கள் தொடர்கிறது. பாக் ஜலசந்தி பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், இது தொடர்பாக உறுதியான மற்றும் காலவரையறைக்குட்பட்ட ஒரு திட்டத்தினை உடனடியாக வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 104 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையால் விடுவிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளும் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், 16 இந்திய மீனவர்கள் ஏற்கனவே இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், பிரதமர் இவ்விவகாரத்தில் தலையிட்டு, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

Tags : Sri Lankan Navy ,CM ,M.K.Stal , 28 fishermen held captive by Sri Lankan Navy, must release their boats: Chief Minister M.K.Stal's letter to PM
× RELATED கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்த...