×

தர்மபுரியில் மின் வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான விவகாரம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்: தலைமை வனப்பாதுகாவலர், டான்ஜெட்கோ தலைவருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் வேட்டை தடுப்பு, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, தர்மபுரியில் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியானதையடுத்து உயிர் தப்பிய இரு குட்டி யானைகளையும், யானைக் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது., ஆனால், அவை எங்கிருந்து வருகிறது தெரியவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், இதுசம்பந்தமான புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். இதையடுத்து, நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். பின்னர், மின்வேலியில் சிக்கி விலங்குகள் பலியாவதை தடுக்க உரிய விதிமுறைகளை அமல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக ஏப்ரல் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கும், தமிழ்நாடு மின்வாரிய தலைவருக்கு உத்தரவிட்டனர்.

Tags : Dharmapuri ,Chief Conservator of Forests ,Danjetco , 3 elephants killed by electric fence in Dharmapuri to appear in person and explain: Court orders chief conservator of forest, Danjetco chief
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...