ராகுலுக்கு கமல்ஹாசன் ஆதரவு

சென்னை: மோடி குறித்த சர்ச்சைகருத்து தெரிவித்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல்காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ராகுல், இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன். நீங்கள் அதிக சோதனை நேரங்களையும். நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்! சத்யமேவ ஜெயதே!! . இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories: