தமிழ்நாட்டில் பாஜ ஆதரவின்றி அதிமுக செயல்பட முடியாது: சி.டி.ரவி பேட்டி

சிக்கமகளூரு: பாஜ தேசிய பொது செயலாளரும், எம்எல்ஏவுமான சி.டி.ரவி, தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கூறியதாவது. தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியுள்ளார். அண்ணாமலை சொல்வது சரி. அப்படி சொன்னால் தான் அதிமுகவினர், தாங்களாக எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு முன் வருவார்கள்.  1990ம் ஆண்டு எங்கள் கட்சி இருந்ததுபோல், தற்போதும் இருந்து வருகிறது. ஆனால் பாஜவின் ஆதரவின்றி அதிமுக செயல்பட முடியாது. எங்களை தேடி அவர்கள் வருவார்கள்.

அண்ணாமலை அதிகப்படியாக ஆவேசமாக பேசி வருவதும் தனக்கு தனித்துவம் தேடிக் கொள்வது சரியானது. உதாரணத்திற்கு தன்னிச்சையாக முடிவு எடுத்தால்தான் கட்சியை வளர்க்க முடியும். முன்பு இருந்த தமிழ்நாட்டு தலைவர்கள் அப்படி செய்யவில்லை. தமிழ்நாட்டில் அப்படி அரசியல் செய்தால் மட்டும் தான், அந்த அரசியலுக்கு மதிப்பு.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: